குழந்தை ஸ்வேதா நலம்
அன்புக்குரிய நண்பர் சிங்கை அன்பு அவர்கள் குழந்தை ஸ்வேதாவின் மருத்துவ உதவிக்கான முயற்சியை, எனது பதிவில் வெளியிட்ட ஒரு வேண்டுகோள் வாயிலாகத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக வலையுலக நண்பர்கள், தகவல்கள் அளித்தும், பொருளுதவி செய்தும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
ஸ்வேதாவின் இதய அறுவை சிகிச்சை ஒரு வாரம் முன்பு நல்லபடி நடந்து முடிந்தது. ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்த ஸ்வேதா, தற்போது வீட்டுக்கு வந்து விட்டாள். அறுவை சிகிச்சை நடந்த இடத்தில் அவ்வப்போது சற்று வலியிருந்தாலும், குழந்தை ஸ்வேதா நலமாகவே இருக்கிறாள். ஒரிரு மாதத்தில் பூரண குணம் அடைந்து விடுவார் என்று டாக்டர் கூறியுள்ளார்.
நேற்று மருத்துவமனை சென்று குழந்தையைப் பார்க்கலாம் என்று எண்ணியிருந்தேன், அதற்குள் ஸ்வேதா டிஸ்சார்ஜ் ஆகி, வீட்டுக்குச் சென்று விட்டாள். எனது உடல் நலமும் சற்று சரியில்லாத நிலையில், ஒரு 2-3 நாட்கள் கழித்து, ஸ்வேதாவை அவளது வீட்டிற்கே சென்று பார்க்கலாம் என்றிருக்கிறேன். இந்த நேரத்தில், உதவிய நண்பர்களுக்கும், ஸ்வேதா குணமடைய வாழ்த்திய / பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 270 ***
9 மறுமொழிகள்:
test !
மிக்க மகிழ்ச்சி பாலா, மற்றும் அன்பு.
எஅ.பாலா,
குழந்தை ஸ்வேதாவின் இதய ஆபரேஷன் நல்லபடியாக நடந்து உடல் நலம் தேறி வருவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
பூரண குணமடைந்து முழுமையாக தினசரி அலுவல்களைத் துவங்க சக்தியளிக்க இறைவனை மனப்பூர்வமாக வேண்டுகிறேன்.
மனநிறைவான செய்தி இன்று காலையில்! நன்றி.
அன்புடன்,
ஹரிஹரன்
ஸ்வேதா நலமாக இருக்கிறாளெனும்
நல்ல விஷயம் அறியத்தந்தீர்கள்
நன்றி பாலா
நல்ல விஷயம்...இன்று அறியத் தந்தாய்... நன்றி பாலா
தொடரட்டும் இந்தப் பணி
மிக்க மகிழ்ச்சி!
மிகுந்த சந்தோசமாய் இருக்கிறது பாலா. தகவலுக்கு மிக்க நன்றி.
நீங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்.
எங்கள் அனைவருடைய வாழ்த்துக்களை ஸ்வேதாவுக்கு தெரிவியுங்கள். மீண்டும் நன்றி.
***************************
சேதுக்கரசி, hariharan, சிபி, சங்கர்,
வருகைக்கு நன்றி.
மதுமிதா,
நன்றி. முடிந்தால் தனிமடல் இடவும்.
எ.அ.பாலா
**************************
அன்பு,CT,
மிக்க நன்றி.
Anbu,
My sincere thanks to you for taking the initiative in this regard.
Post a Comment